புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இப்போதுள்ள வடிவில் சட்டத்தைச் செயல்படுத்தினால் பெரு நிறுவனங்கள் விவசாயிகளைச் சுரண்ட வழிவகுத்து, விவசாயிகளின் பேரழிவுக்குக் காரணமாகிவிடும் என மனுவில் குறிப்பிட்டுள்ளது.
வேளாண் விற்பனைக் குழு என்னும் பாதுகாப்புக் கவசம் இல்லாவிட்டால், அதிக இலாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட பெருநிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களின் கைகளுக்குச் சந்தைகள் சென்றுவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. பெருநிறுவனங்களின் லாப வேட்கைக்கு விவசாயிகளை இலக்காக்கும் வகையில் சட்டங்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.