இந்திய பாதுகாப்பு படையினரின் உபயோகத்துக்காக, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கார்பைன் ரக தானியங்கி துப்பாக்கி வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.
5.56 X 30 எம்எம் அளவுள்ள குண்டுகளைப் பயன்படுத்தும் வகையில் அந்த துப்பாக்கியை டிஆர்டிஓ வடிவமைத்துள்ளது. துப்பாக்கி கான்பூர் ஆயுத தொழிற்சாலையிலும், குண்டுகள் புனே வெடிமருந்து தொழிற்சாலையிலும் தயாரிக்கப்பட்டுள்ளன. இதன் இறுதி கட்டப் பரிசோதனை கடந்த 7ம் தேதி நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து டிஆர்டிஓ குழுவினருக்கு அதன் தலைவர் சதீஷ் ரெட்டி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
3 கிலோ எடைகொண்ட துப்பாக்கி, 100 மீட்டருக்கும் அதிகமான தூரத்தில் உள்ள இலக்கை சுடும் திறன் கொண்டதாகும். கோடைகாலத்தில் மிக அதிக வெப்பநிலையிலும், குளிர்காலத்தில் மிக உயரமான மலைப் பகுதியிலும் சோதித்ததில் சுடும் திறன் மிகத் துல்லியமாக இருந்ததாக கூறப்படுகிறது.