கர்நாடகத் துணை முதலமைச்சர் கோவிந்த் கர்ஜோல் தனக்கு ஊர்மக்கள் பரிசாக அளித்த தங்கக் கிரீடத்தை அரசு கருவூலத்தில் ஒப்படைத்தார்.
அரசியல் சட்டப்படி பதவிக் காலத்தில் பொது ஊழியருக்குக் கிடைக்கும் பரிசுப்பொருட்களை அரசு கருவூலத்தில் சேர்க்க வேண்டும் என்பது விதியாகும்.
இந்நிலையில் கர்நாடகத் துணை முதலமைச்சர் கோவிந்த் கர்ஜோலுக்கு அவரின் சொந்த ஊரைச் சேர்ந்த பொதுமக்கள் 140 கிராம் எடையில் தங்கக் கிரீடத்தைப் பரிசாக வழங்கியுள்ளனர்.
விதிமுறைப்படி அதை அவர் அரசு கருவூலத்தில் செலுத்துவதற்காகக் கர்நாடக மாநிலத் தலைமைச் செயலாளரிடம் ஒப்படைத்துள்ளார்.