பொறியியல் படிப்பில் சேர்வதற்கான ஜேஇஇ தேர்வு அடுத்த கல்வி ஆண்டில், 4 முறை நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் காணொலி வாயிலாக உரையாடிய அவர், ஜேஇஇ தேர்வு கடந்த ஆண்டின் பாடத்திட்டத்துடன் நடத்தப்படும் என்றார். மாணவர்களின் மன உளைச்சலை குறைக்கும் வகையில், வரும் பிப்ரவரி மாதம் தொடங்கி, தொடர்ந்து மாதத்துக்கு ஒரு முறை என 4 முறை ஜேஇஇ தேர்வு நடத்தப்படும் எனவும் கூறினர்.
மாணவர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம் எனவும், எந்த தேர்வில் அதிக மதிப்பெண் கிடைக்கிறதோ அந்த மதிப்பெண்ணே தரவரிசைப் பட்டியலுக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்தார்.