ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் வாழைத்தோட்டத்தின் வழியாக யானைக்கூட்டம் கடந்து செல்லும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
சித்தூர் மாவட்டத்தின் சாந்திபுரம் மண்டலத்தில் காட்டின் அருகே உள்ள தோட்டத்தில் யானைகள் குட்டிகளுடன் கூட்டமாகக் கடந்து சென்றதைப் படம்பிடித்து வெளியிட்டுள்ளனர்.
புதிதாக வளர்ந்த வாழைக் கன்றுகளைச் சேதப்படுத்தாமல் வரப்போரமாக யானைகள் நடந்து சென்றது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.