கொல்கத்தாவில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சென்ற வாகன அணிவகுப்பின் மீது விஷமிகள் கல்லெறிந்து தாக்குதல் நடத்தினர்.
இதில் பாஜக தேசிய செயலாளர் கைலாஷ் விஜயவர்கியாவின் கார் மிகவும் மோசமாக சேதமடைந்தது. வாகன அணிவகுப்பில் சென்ற ஊடக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் கல்வீச்சில் சேதமடைந்தன.
கொல்கத்தாவில் இருந்து டயமண்ட் ஹார்பருக்கு நட்டா செல்லும் வழியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
65 கிலோ மீட்டர் தொலைவுள்ள இந்த சாலையில் ரஜர்ஹத் மற்றும் ஷிராகோல் ஆகிய இடங்களுக்கு இடையே சாலையின் இருமருங்கும் திரண்ட திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள், வேளாண் சட்டங்களுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். அப்போது திடீரென வாகன அணிவகுப்பின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.