கடந்த 2019ல் சர்வதேச அளவில் அதிகளவில் ஆயுதங்களை இறக்குமதி செய்ததில், இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையின் படி, ராணுவத்திற்காக அதிக நிதியை ஒதுக்கிய நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடம் வகிக்கிறது.
ஆயுத விற்பனை மற்றும் ராணுவத்திற்காக அதிக தொகையை ஒதுக்கியது ஆகியவற்றில், அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தொடர்ந்து, முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன.
ஆயுத இறக்குமதியில் சவூதி அரேபியா முதலிடம் பிடித்துள்ளது