ஆந்திராவில் எலூரு பகுதியில் மர்மநோயால் மக்கள் பாதிக்கப்பட்டதற்கு தண்ணீரில் அதிகளவு கலந்திருந்த குளோரினும், கிருமி நாசினியும் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
எலூருவில் திடீரென மர்ம நோய் தாக்கியதில் 550க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களைச் சோதனை செய்தபோது, நோயாளிகளின் ரத்தத்தில் ஈயம் மற்றும் நிக்கல் அதிகமாக இருந்ததாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் போது தண்ணீரில் குளோரின் பொடி அதிகமாக கலந்திருக்கலாம் என்றும், சானிடைசர் எனப்படும் கிருமி நாசினியும் இணைந்து அப்பகுதி நீரை மாசுபடுத்தியிருக்கலாம் என ஆந்திர சுகாதாரத்துறை அமைச்சர் கிருஷ்ணா சீனிவாஸ் தெரிவித்துள்ளார்.