தனது கடற்படை வீரர்களுக்கு பயிற்சி விமானமாக இந்தியத் தயாரிப்பான தேஜஸ் விமானங்களை வாங்க அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது.
அந்நாட்டு கடற்படை வீரர்களுக்கு தற்போது போயிங் நிறுவனத்தின் T-45 கோஷ்ஹாக் ரக விமானத்தில் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் இந்தியத் தயாரிப்பு விமானமான தேஜஸ் இலகுரக போர் விமானம் என்பதால் கூடுதல் சவுகரியங்கள் இருக்கும் என அமெரிக்கா கருதுவதாகக் கூறப்படுகிறது.
எனவே தேஜசை தனது முதல் பயிற்சி விமானமாக வாங்குவதற்கு அமெரிக்க கடற்படைத் தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.