தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டிற்கான அனுமதி கோரிய, சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக, வெளியான தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் மறுத்துள்ளது.
தேவையான பாதுகாப்பு மற்றும் தயாரிப்பு வசதிகள் தொடர்பான தரவுகள் இல்லாத காரணத்தினால், அந்நிறுவனங்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக, வெளியான தகவல் தவறானது என விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.