கர்நாடக சட்டப்பேரவையில் எதிர்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே, பசுவதை தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன் மூலம், இறைச்சிக்காக 13 வயதுக்குட்பட்ட காளைகள் அல்லது பசுக்களை கொன்றால், 7 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது 10 லட்சம் ரூபாய் வரையிலான அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மசோதாவை தாக்கல் செய்வது குறித்து அலுவல் ஆய்வுக் குழுவில் விவாதிக்கப்படவில்லை என, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.