ஹைதராபாத்திலுள்ள 2 நிறுவனங்களில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி குறித்து, 64 வெளிநாடுகளை சேர்ந்த தூதர்கள் சென்று ஆய்வு செய்தனர்.
பாரத் பயோ டெக் மற்றும் பயோலாஜிக்கல் இ என்ற இரு நிறுவனங்களிலும் தடுப்பூசி தயாரிப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அவர்கள் கேட்டறிந்தனர். அந்த நிறுவனங்களின் உயரதிகாரிகள் தூதர்களுக்கு, தேவையான தகவல்களை எடுத்துரைத்தனர்.
பல நாடுகள் தடுப்பூசிகளை தயாரித்து வந்தாலும், உலக மக்களுக்கு தேவைப்படும் அளவுக்கான தடுப்பூசிகளை இந்தியாவால் மட்டும் தான் உற்பத்தி செய்ய முடியும் என்று இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் பேரி ஒ பேரல் (Barry O'Farrell)தெரிவித்தார்.