நடுக்கடலில் 10 நாட்களாக படகில் சிக்கி தவித்த வங்காளதேச நாட்டை சேர்ந்த 19 பேரை இந்திய கடலோர காவல் படை மீட்டுள்ளது.
ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்தில் இருந்து தென்கிழக்கே கடலில் சென்று கொண்டிருந்த ராணா என்ற பெயரிடப்பட்ட வங்காளதேச நாட்டை சேர்ந்த மீன்பிடி படகு ஒன்று இயந்திர கோளாறால் திடீரென நடுக்கடலில் நின்று விட்டது.
அதனை சரி செய்ய முயன்றும் பலனில்லாத சூழலில் படகில் பயணித்தவர்கள் கடந்த 10 நாட்களாக கரைக்கு திரும்ப முடியாமல் பரிதவித்து வந்தனர்.
இந்நிலையில், கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இந்திய கடலோர காவல் படையினர் அவர்களை பத்திரமாக மீட்டனர்.