மகாராஷ்டிராவில் செயல்பட்டு வரும் கராட் ஜனதா சஹகரி வங்கிக்கு வழங்கப்பட்ட லைசன்சை ரத்து செய்து, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
போதுமான மூலதனம் மற்றும் வருவாயை ஈட்டாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கியின் வைப்புத்தொகையாளர்களில் 99 சதவீதத்துக்கும் அதிகமானோர், டெபாசிட் காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகத்திடமிருந்து, தங்கள் வைப்புத்தொகையை முழுமையாகப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.