ஆந்திராவில் பரவிய மர்ம நோயால் 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், குடிநீரில் நிக்கல் என்ற உலோகத்தின் துகள்கள் கலந்திருப்பது தான் பாதிப்புக்கு காரணம் என்று முதல் கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஏலூரில் மர்ம நோய்க்கு ஒருவர் உயிரிழந்த நிலையில் ஏராளமானோர் வலிப்பு நோய் வந்தது போல துடிதுடித்து மயங்கி விழுந்ததால் பதற்றம் ஏற்பட்டது.
அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதில் 400க்கும் மேற்பட்டோர் குணமாகி வீடு திரும்பினர். இன்னும் 77 பேர் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்ததில் மாசுபட்ட குடிநீரில் நிக்கல் கலந்திருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். நீரில் பூச்சிக் கொல்லி மருந்து கலந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.