கொரோனா தடுப்பூசி விநியோக திட்டத்தை கண்காணிக்க கோ-வின் எனும் புதிய செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், கோ-வின் செயலி தடுப்பூசி அளிப்பவர்கள், பெறுவர்கள் போன்ற அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.
ஒன்றுக்கும் மேற்பட்ட நோய் உடையவர்கள் கோ-வின் செயலி மூலம் பதிவு செய்துகொள்ள வேண்டும் எனவும், அவர்களின் தகவல்கள் உறுதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், தடுப்பூசி செலுத்திய பிறகு குறுந்தகவல் அனுப்பப்படும் எனவும், க்யூ ஆர் சான்றிதழும் உருவாக்கப்படும் என்றும் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.