கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் கொரோனா நோயாளி ஒருவர் பாதுகாப்பு கவச உடைகளுடன் வந்து தனது ஜனநாயக கடமையை ஆற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அங்கு முதல் கட்டமாக நேற்று திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டை, ஆலப்புழை மற்றும் இடுக்கி ஆகிய 5 மாவட்டங்களில், 395 உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 6911 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
இந்த நிலையில் ஆலப்புழா மாவட்டத்தின் சேர்த்தலை பகுதியில் உள்ள வாக்கு சாவடி ஒன்றில் கொரோனா நோயாளி ஒருவர் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
இதே போன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டு தனிமைப்படுத்துதல் முகாமில் உள்ள மற்றொரு நபர் பாதுகாப்பு கவச உடைகள், முக கவசம் ஆகியவற்றை அணிந்து கொரோனா தடுப்பு விதிகளை முறையாக பின்பற்றி வாக்களித்து உள்ளார்.