போர்ப்ஸ் இதழின் நடப்பாண்டிற்கான சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட 4 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்த பட்டியலில் நிர்மலா சீதாராமன் 41வது இடத்தை பிடித்துள்ளார். அவரை தொடர்ந்து, எச்சிஎல் தலைமை செயல் அதிகாரி ரோஷினி நாடார், பயோகான் நிறுவனர் கிரண் மஜும்தார் மற்றும் லேண்ட்மார்க் குழுமத்தின் தலைவரான ரேணுகா ஜக்தியானி ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.
சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் தொடர்ந்து பத்தாவது ஆண்டாக,ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் முதலிடம் பிடித்துள்ளார்.