அவசரகால பயன்பாட்டிற்கான கொரோனா தடுப்பூசி அனுமதி குறித்து வல்லுநர் குழு இன்று முடிவு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் பைசர் நிறுவனம், புனேவை சேர்ந்த சீரம் நிறுவனம், பாரத்பயோடெக் நிறுவனம் ஆகிய மூன்றும், கொரோனா தடுப்பூசிக்கான அவசர கால பயன்பாட்டை அனுமதிக்குமாறு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரிடம் விண்ணப்பித்துள்ளன.
இதில் பாரத்பயோடெக்கின் கோவேக்சின் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி ஆகும்.
கோவேக்சின் உள்ளிட்ட 3 தடுப்பூசிகளையும் அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதிக்கலாமா என வல்லுநர் குழு இன்று ஆய்வு செய்து முடிவு எடுக்க உள்ளது.
வல்லுநர் குழு பரிந்துரையின் அடிப்படையில், தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் உரிய முடிவுகளை எடுப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.