செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

6 பெண்களுக்கு அல்வா கொடுத்த ஐ.டி அமாவாசை..! காலில் விழுந்து கதறல்

Dec 09, 2020 07:02:26 AM

ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களிடம் முகநூல் மூலம் பழகி காதல் வலையில் வீழ்த்தி திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி நகைப்பணம் பறித்து வந்த ஐடி ஊழியர் ஒருவர், செல்போன் வீடியோ மூலம் கையும் களவுமாக, 6ஆவதாக திருமணம் செய்த இளம் மனைவியிடம் சிக்கியுள்ளார். 

காருக்குள் அமர்ந்து, மதுவை ருசித்தபடி ஐ.டி பெண்களுக்கு ஸ்கெட்ச் போட்டு மனைவி குடும்பத்தாரிடம் கொத்தாக சிக்கிய ஐ.டி அமாவாசை விஜயபாஸ்கர் இவர் தான்..!

ஐதராபாத்தில் உள்ள சந்தாநகர் பகுதியை சேர்ந்த ஐ.டி.ஊழியர் விஜய பாஸ்கர். இவருக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. வீட்டில் ஒரு மனைவி இருக்க இந்த திருமணத்தை மறைத்து விஜயபாஸ்கர் முகநூலில் பெண் வேட்டை நடத்தியுள்ளார்.

முகநூலில் அறிமுகமாக கூடிய மென்பொருள் துறையில் பணிபுரியும் பெண்கள் தான் இவரது முதல் இலக்கு.. ஏனென்றால் அவர்கள் தான் வங்கி கணக்கில் பணமும், வீட்டில் நகையும் சேர்த்து வைத்திருப்பார்கள் என்பதால் அவர்களிடம் நட்பாக பழகி காதல் வலையில் வீழ்த்துவார். பின்னர் ஆசை வார்த்தை கூறி திருமணம் வரை அழைத்துச்சென்று, சாமர்த்தியமாக பேசி தனது இச்சையை தீர்த்துக் கொண்டு நகைப்பணத்துடன் கம்பி நீட்டி விடுவது விஜயபாஸ்கரின் வாடிக்கை என்று கூறப்படுகின்றது..!

முதல் மனைவி தவிர 4 கணினி மென் பொறியாளர்களுக்கு இனிப்பான பேச்சால் அல்வா கொடுத்து நகை பணம் பறித்த இந்த ஒயிட் அமாவாசை, 6ஆவதாக ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோலை சேர்ந்த செளஜன்யா என்ற பெண்ணிடம் தனது வேலையை காட்டிவிட்டு தப்பிக்க முயன்றுள்ளார்.

ஆனால் அந்த பெண் உஷாராக இருந்து மன்மதன் விஜயபாஸ்கரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் தனது கணவன் அடிக்கடி வீட்டில் இல்லாமல் காருக்குள் சென்று அமர்ந்து கொண்டு செல்போனில் பேசிவருவதை கண்டறிந்த மனைவி சவுஜன்யா, அவரது செல்போனை எடுத்து பார்த்த போது அவர் சிவானி என்ற பெண்ணிற்கு வீடியோ மூலம் புதிதாக ஸ்கெட்ச் போட்டுக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

கணவரின் அமாவாசை சேட்டை குறித்து தனக்கு திருமணம் செய்து வைத்த குடும்பத்தினரிடம் தெரிவிக்க ஆக்ரோச மானவர்களால் சிறப்பாக நடந்தது மாப்பிளை அழைப்பு..!

அடிக்கு அடி உதைக்கு உதை என தலைமுடி கலையக் கலைய கிடைத்த கவனிப்பால் 6 பெண்களிடம் செய்த மோசடி வெளிச்சத்திற்கு வந்ததோடு, மனைவியின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கும் பரிதாப நிலைக்கும் தள்ளப்பட்டார் விஜயபாஸ்கர்..!

ஐ.டி மாப்பிள்ளையை அடித்துத் துவைத்த கையோடு அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விஜயபாஸ்கரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை ஆறு பெண்களை விஜயபாஸ்கர் ஏமாற்றிப் பணம் பறித்தது வந்தது தெரியவந்துள்ளதையடுத்து இவர் மூலம் ஏமாந்த பெண்களிடம் புகார் பெற்று ஐ.டி மாப்பிள்ளைக்கு தனித்தனியாக விருந்து வைக்கத் தேவையான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அதே நேரத்தில் முக நூலில் தன்னிடம் பழகும் ஆண் நண்பர்களின் பின்னணி தெரியாமல் போட்டோஷாப்பில் மின்னும் புரொஃபைல் போட்டோவைப் பார்த்து ஏமாந்து, பெண்கள் உடல், பொருள், ஆவியை எல்லாம் அப்படியே கொடுத்தால், இறுதியில் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்..!


Advertisement
டெல்லி குடியரசு தின அணிவகுப்பு ஊர்திகள் சுழற்சி முறையில் அனுமதி... 2026 குடியரசு தினவிழாவில் தமிழக அரசின் ஊர்தி பங்கேற்க முடியும்
கேரளத்தில் மேற்குவங்க பெண்ணை பலாத்காரம் செய்த அசாம் மாநிலத்தை 2 பேர் கைது
சபரிமலை ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு... நாள்தோறும் சுமார் 90 ஆயிரம் பக்தர்களுக்கு மேல் தரிசனம் செய்து வருவதாக தகவல்
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு
திருப்பதி மலையில் சாரல் மழையுடன் கடும் பனிமூட்டம்.. முகப்பு விளக்கை எரியவிட்டபடி செல்லும் வாகனங்கள்..
கட்டுப்பாட்டை இழந்த கடற்படைக்கு சொந்தமான படகு பயங்கரமாக மோதி விபத்து..
கேரளாவில் இருந்து இறைச்சி, மருத்துவக் கழிவுகள் கொண்டுவரப்படுவதாக புகார்
சபரிமலை கோவில் மேற்கூரையிலிருந்து நின்று பக்தர் எடுத்த விபரீத முடிவு
காரிலிருந்தவாறு ஆதிவாசி இளைஞரை சாலையில் இழுத்துச் சென்ற நபர்கள்...போலீசார் விசாரணை
வாகன தணிக்கையின் போது சிக்கிய ரூ.15 லட்சம் கள்ள நோட்டு - கைது செய்த போலீசார்

Advertisement
Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

ஒத்த ஆளு மொத்த உயிரையும் காத்துருக்கா.. அவள் எங்கள் தெய்வம்..! பேருந்தில் மின்சாரம் பாய்ந்தது எப்படி ?

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

அவரு ஆபீசரா இருக்கலாம்.. அதுக்காக மகளை கேட்பாரா ?.. ஜெயிலருக்கு செருப்படி ஏன் ? ஏறி மிதித்து சட்டையை கிழித்த சம்பவம்

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

காதலிக்கு பிறந்த நாள்... பரிசாக உயிரையே கொடுத்தசென்னை இன்ஸ்டா காதலன்..! மதுவால் மீனுக்கு இரையான 3 உயிர்கள்

Posted Dec 21, 2024 in தமிழ்நாடு,Big Stories,ஆன்மீகம்,

சாமிமார்களே உஷாரய்யா...! குறுக்கு வழிக்கு 200 ரூபாய் நேர் வழியில் செல்ல ஃப்ரீ

Posted Dec 21, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

தேனீர் அருந்த கூப்பிட்டு சென்ற அந்த நண்பரால் எல்லாம் முடிஞ்சி போச்சிப்பா..! நெல்லை நீதிமன்ற வாசலில் பரபரப்பு..!


Advertisement