காபி டே (Coffee Day) நிறுவனர் சித்தார்த் தற்கொலை செய்து ஓராண்டிற்கு மேல் ஆகியுள்ள நிலையில் அந்நிறுவன புதிய சிஇஓ-வாக அவருடைய மனைவி மாளவிகா ஹெக்டே (Malavika Hegde) பொறுப்பேற்றுள்ளார்.
மங்களூரு அருகே உள்ள நதியில் குதித்து சித்தார்த் 2019ம் ஆண்டு தற்கொலை செய்தார்.
கடனை திருப்பி செலுத்துவதில் அளிக்கப்பட்ட நெருக்கடியே தற்கொலைக்கு காரணமாக கூறப்பட்டது. இதையடுத்து கடனை அடைக்க சொத்துகளை காபி டே விற்று வந்தது.
இந்நிலையில் காபி டே எண்டர்பிரைசஸ் நிறுவனத்தால் ஒழுங்குமுறை அமைப்பிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ள கோப்பில், மாளவிகா ஹெக்டே புதிய சிஇஓவாக நியமிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.