ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரியில் உள்ள ஏலூரில் ஏற்பட்ட மர்ம நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 470ஐ கடந்துள்ளது. கடந்த சனிக்கிழமை தொடங்கி பொதுமக்கள் திடீரென மயங்கி விழுத் தொடங்கியதில்,
இதுவரை ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பாதிக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பிய நிலையில், மூச்சுத் திணறல் மற்றும் வலிப்பு வந்தது போன்றவை பொதுவான அறிகுறிகளாக காணப்படுகிறது.
மர்ம நோய் குறித்து அறிய, பாதிக்கப்பட்வர்களிடம் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு எய்ம்ஸ் ஆய்வக பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மத்திய அரசின் சிறப்புக் குழுவுடன் சேர்ந்து, உலக சுகாதார அமைப்பின் குழுவும் ஆய்வு செய்து வருகிறது.