கோவா விமான விபத்தில் உயிரிழந்த விமானியின் உடல் 11 நாட்களுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த மாதம் 26ம் தேதி மிக் 29 கே விமானம் ஒன்று பயிற்சியின் போது அரபிக்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் ஒரு விமானி மீட்கப்பட்ட நிலையில் மற்றொரு விமானியான நிஷாந்த் சிங்கைத் தேடும் பணி கடந்த 11 நாட்களாக நடந்து வந்தது.
இந்நிலையில் கோவா கடற்கரையில் இருந்து 30 மைல் தொலைவில் விமானி உடலின் சிதைந்த பாகங்கள் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து நடந்த தேடுதல் வேட்டையில் 70 மீட்டர் ஆழத்தில் நிஷாந்த் சிங்கின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.