காங்கிரஸில் இருந்து விலகிய நடிகை விஜயசாந்தி, பாஜகவில் இணைந்தார்.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் விஜயசாந்தி.
பாஜக, டி.ஆர்.எஸ் போன்ற கட்சிகளில் இருந்து பிறகு 2014ம் ஆண்டு காங்கிரஸில் சேர்ந்த இவர், கடந்த சில மாதங்களாக கட்சிப்பணிகளில் இருந்து விலகியிருந்தார்.
இந்த நிலையில், தமக்கு கட்சியில் முக்கியத்துவம் இல்லாததால் காங்கிரசில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். இதனையடுத்து டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துவந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்துள்ளார்.