போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை நேரில் சந்தித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது ஆதரவைத் தெரிவித்துக் கொண்டார்.
புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டுப் பன்னிரண்டாம் நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால், சிங்கு என்னுமிடத்தில் போராட்டம் நடத்தும் விவசாயிகளைச் சந்தித்துப் பேசினார். முதலமைச்சர் என்கிற முறையில் தான் வரவில்லை என்றும், போராட்ட ஆதரவாளர் என்ற முறையில் வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.