கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.
இதில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.காலியாக இருந்த ராஜராஜேஸ்வரிநகர், சிரா ஆகிய தொகுதிகளுக்கு சமீபத்தில் இடைத்தேர்தல் நடந்து முடிந்தது. இதில் 2 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெற்றது.
இந்நிலையில் சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் பெங்களூரு விதான சவுதாவில் இன்று தொடங்குகிறது. இதில் 10-க்கும் மேற்பட்ட புதிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளது.