விவசாயிகளின் நாடு தழுவிய பந்த் அறிவிப்பை அடுத்து, டெல்லியின் நான்கு முக்கிய எல்லைகள் மூடப்பட்டுள்ளன.
நேற்று 11 வது நாளாக விவசாயிகள் தலைநகரில் போராட்டம் நடத்தின. விவசாயிகள் போராட்டத்தை முறியடிக்க டெல்லி போலீசார் குழாய்களில் தண்ணீர் விநியோகத்தைத் தடை செய்வதாக விவசாயிகள் புகார் தெரிவித்தன.
இதனிடையே டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இத்தகைய நிலையில் சிங்கு, அவுசாண்டி, பியாவோ மணியாரி, மங்கேஷ் ஆகிய நான்கு எல்லைப்பகுதிகளில் இருந்து டெல்லிக்குள் விவசாயிகள் அதிகளவில் வராமல் இருக்க எல்லைகளை போலீசார் மூடி சீல் வைத்துள்ளனர்.
பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.