நாடு முழுவதும் 2,500 நீதிமன்ற வளாகங்களில் வீடியோ கான்பரன்ஸ் வசதியை ஏற்படுத்த தேவையான நிதி ஒதுக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்காக கடந்த செப்டம்பர் மாதம் 5 கோடி ரூபாயும், அக்டோபர் மாதம் 28 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சட்டஅமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக தற்போது நீதிமன்றங்களில் ஆன்லைன் மூலம் விசாரணை நடைபெறுவது அதிகரித்துள்ளது. ஆனால் அதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் நீதிமன்றங்களில் இல்லாத நிலை காணப்பட்டது.
இந்த நிலையில் தற்போது இந்த நிதி மூலம் வீடியோ கான்பரன்ஸ் அறை அமைப்பதற்குத் தேவையான மானிட்டர், கேபிள், வன்பொருள் உள்ளிட்டவை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.