இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 3 ஆயிரத்து 248ஆக குறைந்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் 21ம் தேதி 4 லட்சத்து 2 ஆயிரத்து 529 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.
அதற்கடுத்து அந்த எண்ணிக்கையும் உயர்ந்து வந்தது. இந்நிலையில் 138 நாள்களில் இல்லாத அளவுக்கு இன்று அந்த எண்ணிக்கை குறைந்துள்ளது.