மத்திய ஆசிய நாடுகள் மற்றும் ஜப்பான், சைபீரியா போன்ற நாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் உணவு தேடி இந்தியாவிற்குள் பறந்துவந்துள்ளன.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சரணாலயத்தின் பூங்காவில் இந்தப் பறவைகள் முகாமிட்டுள்ளன. வழக்கமாக நவம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி வரை பறவைகள் கடும் குளிர்ப்பிரதேசங்களை விட்டு பல ஆயிரம் கிலோ மீட்டர் பறந்து உணவு தேடி இடம் பெயர்வது வழக்கமாகும். அறுவடைக்காலத்தில் அந்தப் பறவைகள் இந்தியாவில் தஞ்சம் அடைகின்றன.