விடுதலை விவகாரத்தில் சசிகலாவுக்கு எந்த சிறப்பு சலுகையும் வழங்கபடாது என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று பெருங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் 2017ம் ஆண்டு முதல் சசிகலா அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் விதிக்கப்பட்ட 10 கோடி ரூபாய் அபராதம், சிறப்பு நீதிமன்றத்தில் அவரது சார்பாக அண்மையில் செலுத்தப்பட்டது.
இதையடுத்து நன்னடத்தை அடிப்படையில் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய சசிகலா கோரியிருந்தார். இதுகுறித்து பெங்களூரில் பேசிய பசவராஜ் பொம்மை, நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும் சிறை விதிகள் அடிப்படையிலுமே சசிகலா விடுதலை செய்யப்படுவார் என்றார்.