மராத்தா மேம்பாட்டு ஆணையம் அமைக்கும் கர்நாடக அரசின் முடிவைக் கண்டித்துக் கன்னட அமைப்பினர் இன்று முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடகத்தில் வாழும் மராத்தா இனத்தவரின் வளர்ச்சிக்காக 50 கோடி ரூபாய் நிதியில் மராத்தா மேம்பாட்டு ஆணையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார். இதைக் கண்டித்துக் நடைபெறும் போராட்டத்தால் பெங்களூர் மெட்ரோ ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
பெங்களூர் டவுன்ஹால் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கன்னட அமைப்பினரைக் காவல்துறையினர் கைது செய்தனர். ஹூப்ளி, பெல்லாரி, மைசூர் ஆகிய நகரங்களிலும் கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.