ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் ஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி அதிக இடங்களை வென்றுள்ளது.
150 வார்டுகளுக்கு நடைபெற்ற வாக்குப்பதிவில் அக்கட்சிக்கு 58 இடங்கள் கிடைத்தன . கடந்த தேர்தலில் அக்கட்சி 99 இடங்களை வென்றது. காங்கிரசுக்கு இரண்டு இடங்களில் மட்டும் வெற்றி கிடைத்துள்ளது.
இம்முறை பாஜகவுக்கு 47 இடங்கள் கிடைத்துள்ளன. 43 இடங்களை வென்ற ஓவைசியின் இஸ்லாமியக் கட்சி மூன்றாவது இடத்தை பெற்றது. இக்கட்சி தனது வாக்குவங்கியை தக்க வைத்துக் கொண்டது. தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி 12 இடங்களில் 300 வாக்குகளுக்குள் தோல்வியடைந்ததை சுட்டிக் காட்டியுள்ளது.