புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி டிசம்பர் எட்டாம் நாள் நாடுதழுவிய மறியல் மற்றும் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
நேற்று விஞ்ஞான் பவனில் மத்திய அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சில் கலந்துகொண்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், புதிய வேளாண் சட்டங்களில் உள்ள 39 குறைபாடுகளைச் சுட்டிக்காட்டினர்.
அவற்றை நீக்குவதாக அரசு எந்த உறுதிமொழியும் அளிக்காத நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றிக் கலந்து பேசிய விவசாய சங்கப் பிரதிநிதிகள் செய்தியாளர்களிடம் பேசினர்.
அப்போது, டிசம்பர் 8ஆம் நாள் நாடு தழுவிய வகையில் மறியல் மற்றும் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தனர்.