டெல்லியில் வேளாண் மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு கனடா பிரதமர் ஆதரவு தெரிவித்ததற்கு அந்நாட்டு தூதரை நேரில் வரவழைத்து இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
கடந்த திங்கள்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ, விவசாயிகள் போராட்டம் கவலை அளிப்பதாகவும், அவர்களது அமைதி வழி போராட்டத்திற்கு கனடா ஆதவளிப்பதாகவும் பேசியிருந்தார்.
கனடா நாட்டின் எம்பிக்கள் மற்றும் அமைச்சர்கள் சிலரும் இதே போன்று கருத்து தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து டெல்லியில் கனடா தூதரை அழைத்த இந்திய வெளியுறவு அமைச்சகம், இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட்டால் இருநாடுகளின் உறவு கடுமையாக பாதிக்கப்படும் என்று எச்சரித்தது.