புகையிலையை எந்த வகையிலும் உட்கொள்வதில்லை என அரசு ஊழியர்களிடம் உறுதிமொழிப் பத்திரம் எழுதி வாங்குவதை ஜார்க்கண்ட் அரசு கட்டாயமாக்கியுள்ளது.
அரசு அலுவலகங்களையும் தனியார் நிறுவனங்களையும் புகையிலைப் பொருட்கள் இல்லா மண்டலங்களாக ஆக்குவதற்கு ஜார்க்கண்ட் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, புகைக்கும், மெல்லும் வகைப் புகையிலைப் பொருட்களை எந்த வகையிலும் உட்கொள்வதில்லை என அரசு ஊழியர்களிடம் உறுதிமொழிப் பத்திரத்தில் கையொப்பம் வாங்குவதைக் கட்டாயப்படுத்தியுள்ளது.
புதிதாக வேலைக்கு விண்ணப்பிப்போரும் எந்த வகையிலும் புகையிலையைப் பயன்படுத்துவதில்லை என உறுதியளிக்க வேண்டும். 2021 ஏப்ரல் மாதம் முதல் இது நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.