ரிசர்வ் வங்கி, பிற வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம், வங்கிகளின் வைப்புத் தொகைக்குச் செலுத்தும் வட்டி விகிதம் ஆகியவற்றில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
மும்பையில் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், பணக்கொள்கையை அறிவித்தார். அப்போது ரிசர்வ் வங்கி பிற வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் மாற்றமில்லாமல் 4 விழுக்காடாகத் தொடர்ந்து நீடிக்கும் எனத் தெரிவித்தார்.
இதேபோல் ரிசர்வ் வங்கியில் வங்கிகள் வைத்துள்ள வைப்புத் தொகைக்கான வட்டி விகிதமும் தொடர்ந்து 3 புள்ளி மூன்று ஐந்து விழுக்காடாக நீடிக்கும் எனத் தெரிவித்தார்.
வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்குக் கடன் வழங்குவதற்கான குறைந்தபட்ச வட்டி விகிதமும் மாற்றமில்லாமல் 4 புள்ளி இரண்டு ஐந்து விழுக்காடாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.