ஊழல் கறை படிந்த அரசியல்வாதிகளை நிரந்தரமாகத் தேர்தலில் போட்டியிடத் தடை கோரும் பொது நல மனுவுக்கு எதிராக மத்திய அரசு எதிர்மனு தாக்கல் செய்தது.
உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் மத்திய அரசு தரப்பில் நேற்று வாழ்நாள் தடைக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஊழல் கறை படிந்த அரசியல்வாதிகள் தண்டனை முடிந்த பின்னர் சிறையை விட்டு வெளியே வந்து தேர்தலில் போட்டியிட ஆறு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனை ஆயுட்காலத் தடையாக நீட்டிக்கக் கோரி பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்தியாய் தரப்பில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
அரசுப் பதவிகளை வகிப்பவர்கள் , மக்களுக்கு உண்மையாக இருப்பதாக வாக்குறுதி அளித்துதான் பதவியேற்கின்றனர் என்று சுட்டிக்காட்டிய மத்திய அரசு, வாழ்நாள் தடை தேவையில்லை என்று தெரிவித்துள்ளது.