மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு விளையாட்டுத்துறை அமைச்சகம் அனைத்தையும் செய்யும் என மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.
29ஆவது உலக மாற்றுத் திறனாளி தினத்தை முன்னிட்டு, காணொலிக் காட்சி மூலம் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்கள் அனைவரும் நம் நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் பலமாகவும், உத்வேகமாகவும் உள்ளனர் என்றார்.
மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு முடிந்த அளவு உதவும்படி மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுப்பதாகவும் கூறினார்.