கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள், முறையாக அமல்படுத்தப்படுகிறதா என்பது பற்றி பதிலளிக்க மத்திய, மாநில அரசுகள் வருகிற 7ந்தேதிக்குள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கொரோனா நோயாளிகளுக்கான முறையான சிகிச்சை, இறந்துபோன கொரோனா நோயாளிகளின் உடல்களை கண்ணியமாக கையாளுதல், அடக்கம் செய்தல் தொடர்பாக தானாக முன்வந்து பதிவு செய்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
இது தொடர்பாக நேற்று நடைபெற்ற விசாரணையின்போது, குஜராத், மத்திய அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, டெல்லி அரசின் மூத்த வழக்கறிஞர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.