வேளாண் பொருட்களுக்கான அடிப்படை ஆதார விலையில் மாற்றமிருக்காது என்று வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விவசாயிகளுக்கு உறுதியளித்துள்ளார்.
விவசாயப் பிரதிநிதிகளுடன் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது அவர் இதனை தெரிவித்தபோது, எழுத்துப்பூர்வமாக தரும்படி விவசாயிகள் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தோமர், அடிப்படை ஆதார விலையில் எந்தவித மாற்றமும் இருக்காது என்று கூறினார்.
விவசாயிகளிடம் பேச்சு நடத்துவதில் அரசுத் தரப்புக்கு எந்த வித ஈகோவும் இல்லை என்றும் மிகவும் ஆக்கப்பூர்வமான முறையில் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.