ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலுக்குப் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.
கடந்த டிசம்பர் முதல் தேதி 150 வார்டுகளை உள்ளடக்கிய ஹைதராபாத் மாநகராட்சிக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. 75 லட்ச வாக்காளர்களில் 34 லட்சத்து 50 ஆயிரம் வாக்காளர்களே வாக்குகளைப் பதிவு செய்தனர்.
இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. வாக்கு எண்ணும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.