கர்நாடகாவில் கட்டாய மத மாற்றத்திற்கு எதிராக, சட்டம் கொண்டு வருவது உறுதி என, மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
மங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் இந்த சட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்றார்.
கட்டாய மதமாற்ற சட்டத்தை ஏற்கனவே நிறைவேற்றியுள்ள உத்தரபிரதேசம், ஹரியானா மாநிலங்களில் இருந்து சட்ட நகல்கள் பெறப்பட்டு, மாநில அரசின் சார்பில் வேறு என்னென்ன புதிய அம்சங்கள் சேர்க்க வேண்டும் என்பதை தீர்மானித்த பின், சட்டம் அமல்படுத்தப்படும் என பசவராஜ் பொம்மை குறிப்பிட்டுள்ளார்.