பிரதமர் மோடி தலைமையில் காணொலி காட்சி வாயிலாக, இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்கும் இந்த கூட்டத்தில், மத்திய அமைச்சர்களான அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஹர்ஷ்வர்தன் ஆகியோரும் பங்கேற்பார்கள் எனக் கூறப்படுகிறது.
கூட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி கொள்முதல் மற்றும் வினியோகம் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
10-க்கும் அதிகமான எம்.பிக்களைக் கொண்ட கட்சிகளுக்கு மட்டுமே, இந்தக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.