இந்தியாவில் கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பைசர் Pfizer நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் Pfizer நிறுவனமும், ஜெர்மனியின் பயான்டெக் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு பிரிட்டன் அனுமதி அளித்துள்ளது.
அமெரிக்கா 10 கோடி டோஸ்கள் வாங்குவதற்கும், ஐரோப்பிய ஒன்றியம் 20 கோடி டோஸ்கள் வாங்குவதற்கும், பிரிட்டன் 4 கோடி டோஸ்கள் வாங்குவதற்கும் முன்கூட்டியே ஒப்பந்தம் போட்டுள்ளன.
இந்தியாவிலும் தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டுவர பைசர் முயன்று வருகிறது. இந்த தடுப்பூசியின் விலை சுமார் 3 ஆயிரத்து 700 ரூபாய் வரை இருக்கலாம் என்பதும், சேமித்து வைக்க மைனஸ் 70 டிகிரி கோல்டு ஸ்டோரேஜ் உருவாக்கப்பட வேண்டும் என்பதும் சவாலான விஷயமாக பார்க்கப்படுகிறது.