இந்தியாவில் 2018ம் ஆண்டை விட 2019ல் மலேரியா நோயாளிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், மலேரியாவைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளதாக உலக சுகாதார மையம் பாராட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மேலும் 2018ம் ஆண்டை விட 2019ல் மலேரியா நோயாளிகளின் எண்ணிக்கை 17 புள்ளி 6 விழுக்காடு குறைந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.