டெல்லியில் விவசாயிகள் போராட்டம் 8வது நாளாக தொடரும் நிலையில், மத்திய அரசுடனான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.
இருதினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், சிறப்புக் குழு அமைத்து வேளாண் சட்டங்கள் தொடர்பான பிரச்னைக்கு தீர்வு காணும், அரசின் ஆலோசனையை விவசாய சங்கத்தினர் ஏற்க மறுத்தனர்.
இதையடுத்து, மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாய சங்கத்தினருடன் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதனிடையே, விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பஞ்சாப் முதலமைச்சர் அம்ரேந்திர் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று சந்தித்து பேசத் திட்டமிட்டுள்ளார்.