இந்தியாவின் இரண்டாவது பெரிய எரிபொருள் சில்லரை விற்பனை நிறுவனமான பாரத் பெட்ரோலியத்தின் பங்குகளை வாங்க 3 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
காணாலியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்றுப் பேசிய அவர், பரிவர்த்தனை விவரங்களை ஆய்வு செய்த பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நடப்பு நிதி ஆண்டில் 2 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாயை திரட்டுவதற்காக, மத்திய அரசுக்கு பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் உள்ள 53 சதவீத பங்குகளையும் விற்க திட்டமிடப்பட்டுள்ளது.
வேதாந்தா நிறுவனம் ஏற்கனவே பங்குகளை வாங்க இருப்பதாக அறிவித்திருந்த நிலையில், அப்பலோ குளோபல் மேனஜ்மண்ட் நிறுவனமும் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.