ரஷியாவின் கொரோனா தடுப்பூசியான ஸ்பூட்னிக் -வி, 2 மற்றும் 3ம் கட்ட கிளினிகல் சோதனைகளுக்காக கடந்த வாரம் இந்தியா வந்தடைந்தது.
இந்தியாவில் டாக்டர் ரெட்டீஸ் லேபும், ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிதிய அமைப்பும் சேர்ந்து தடுப்பூசியின் கிளினிகல் சோதனைகளை நடத்துவதற்கான நடவடிக்கைகளை துவக்கி உள்ளன.
இந்தியாவில் ஐதராபாத்தில் உள்ள ஹெட்டரோ மருந்து நிறுவனம் முதற்கட்டமாக 10 கோடி ஸ்பூட்னிக்-வி தடுப்பூசிகளை தயாரிக்கும்.
இந்த தடுப்பூசியின் வர்த்தக ரீதியிலான உற்பத்தியை வரும் ஜனவரி மாதம் துவக்க உள்ளதாக ரஷ்ய நேரடி முதலீட்டு நிதிய அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு முன்னுரிமை அடிப்படையில் இந்த தடுப்பூசி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசி 95.5சதவிகிதம் பலனளிக்க கூடியது என்றும் 20 க்கும் மேற்பட்ட நாடுகள் தடுப்பூசிக்கு ஆர்டர் வழங்கியுள்ளதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.