டாக்டர் ரெட்டீஸ் லேபரேட்டரீஸ் நிறுவனம் ரஷியாவின் கொரோனா தடுப்பூசியான ஸ்பூட்னிக் வி-ன், 2 மற்றும் 3ம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை இந்தியாவில் தொடங்கியுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் கட்டுப்பாடான முறையில் நடைபெற உள்ள இந்த பரிசோதனைகள், தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு திறனை தெளிவுபடுத்தும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஸ்புட்னிக் வி தடுப்பூசி 95 சதவிகிதம் பலனளிப்பதாக ரஷியா தெரிவித்துள்ள நிலையில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் 3ம் கட்ட மருத்துவ பரிசோதனையில் பங்கேற்க உள்ளனர்.